நடிகர், அரசியல்வாதி, என்பதைத் தாண்டி நல்ல மனிதர் என அனைத்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெயரெடுத்தவர் ஜே.கே.ரித்தீஷ்.
நடிகர், அரசியல்வாதி, என்பதைத் தாண்டி நல்ல மனிதர் என அனைத்து ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெயரெடுத்தவர் ஜே.கே.ரித்தீஷ்.
இவரின் திடீர் மறைவு, திரையுலகிலும் அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிறந்த இவர், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக சார்பில், போட்டியிட்டு எம்.பி.யாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ரித்தீஷ் ஒரு சில காரணங்களால் தி.மு.கவில் இருந்து விலகி, அதிமுக கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, அதிமுக வேட்பாளரை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த பின் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறினர்.
இந்த தகவல் வெளியானதும், அரசியல் கட்சியினர், தொண்டர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 46 வயது ஆகும் ரித்தீஷின் மரணம், தற்போது வரை யாராலும் நம்ப முடியாததாகவே இருக்கிறது.

இந்நிலையில் இவருடைய குடும்பம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
ஜே.கே.ரித்தீஷ், கடந்த 2007ம் ஆண்டு ஜெகதீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் மற்றும் மனைவி மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்த ரித்தீஷின் திடீர் மறைவு இவர்களுடைய குடும்பத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்நிலையில் இவர், மனைவி, குழந்தைகளோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி பார்ப்பவர்கள் மனதை கலங்கச் செய்துள்ளது.
