Asianet News TamilAsianet News Tamil

கடைசியாக ஒரே ஒரு முறை தந்தை முகத்தை காண 1400 கிலோமீட்டர் பயணித்த ரிஷி கபூர் மகள்!

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 5 :30 மணியளவில், மருத்துவமனையில் உயிர் விட்ட, பிரபல பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் முகத்தை காண, அவருடைய மகள்,  டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் வந்துள்ளார்.
 

rishi kapoor daughter travel in mumbai 1400 kilo meters
Author
Chennai, First Published Apr 30, 2020, 8:04 PM IST

உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை 5 :30 மணியளவில், மருத்துவமனையில் உயிர் விட்ட, பிரபல பழம்பெரும் நடிகர் ரிஷி கபூரின் முகத்தை காண, அவருடைய மகள்,  டெல்லியில் இருந்து மும்பைக்கு 1,400 கிலோ மீட்டர் பயணம் வந்துள்ளார்.

நடிகர் ரிஷிகபூரின் மகள் ரித்திமா,பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூச்சு திணறல் காரணமாக மருத்துவ மனையில்  சேர்க்கப்பட்ட ரிஷி கபூர் உயிர், திடீர் என சிகிச்சை பலனின்றி பிரிந்தது.

rishi kapoor daughter travel in mumbai 1400 kilo meters

இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அணைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தன்னை பாராட்டி, சீராட்டி வளர்த்த தந்தையின் முகத்தை ஒரே ஒரு முறையாவது பார்க்கவேண்டும் என, டெல்லியில் இருந்து... மும்பைக்கு சுமார் 1400 கிலோ மீட்டர். 19 மணி நேரம் காரிலேயே பயணம் செய்து வந்துள்ளார்.

தந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க, ரிஷி கபூரின் மகள் மேற்கொண்டுள்ள இந்த பயணமும், அவர் தந்தை மேல் வைத்துள்ள பாசமும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios