ஆம்! ஷூட்டிங்கில் சக ஹீரோயினை மடிய வைக்க ஒவ்வொரு ஹீரோவும் ஒரு யுக்தியை கையாள்வார்கள். ஆனால் நம்ம தம்பி, தங்க கம்பி பயன்படுத்துவதென்னவோ தன் நாக்கைத்தான். சீச்ச்சீ தப்பா நினைக்காதீங்க பாஸ், பல குரல்ல பேசி, ஹீரோயினை மெர்சலாக்கி தன் பாக்கெட்டுக்குள்ளே பார்சல் பண்ணிப்பாருன்னு சொல்ல வந்தோம். 

அந்த ஹீரோயின் அவிடெ பூமியில இருந்து இவிடெ நடிக்க வந்துச்சு. கூடவே பாடிகார்டாக அவங்க அம்மாவும். என்னதான் ஹிட்டடிச்சு, பட்டையை கிளப்பினாலும் இப்பவரைக்கும் ஹோம்லியான பொண்ணு அது. அப்படின்னா வந்த புதுசுல எப்படி இருந்திருக்குமுன்னு யோசிச்சுக்குங்க. 

அது என்னமோ தெரியலை, என்ன மாயமோ தெரியலை. தம்பி கிட்ட மட்டும் அதுக்கு ஏக வழிசல். எல்லாத்துக்கும் காரணம் தம்பியோட நாக்கு! நாக்கு. ஹீரோயினோட அப்பாவுல தொடங்கி, அடுத்த வீட்டு அங்கிள் வரைக்கும் எல்லாரையும் மாதிரி பேசிப் பேசியே வழிக்கு கொண்டு வந்தாப்ல. 

போதா குறைக்கு ஷூட்டிங்குல இவங்க ரெண்டு பேருக்குமான காம்பினேஷன் சீன் வந்தாலே துணை இயக்குநர்களின் செல்ல உசுப்பல்கள் வேறு! 

இளமை புதுமையின் உச்சத்தில், மனதில் வெள்ளந்தியாய் ஆனால் உடல் பூரிப்பில் செம்மத்தியாய் வந்த அந்த பொண்ணுக்கு இந்த அனுபவம் புது கிளுகிளுப்பைக் கொடுத்தது. போதாக் குறைக்கு தமிழகமே கொண்டாடும் நம்ம ஹீரோ வேறு ஏக நெருக்கத்தில். நொடிக்கு நொடி அவரது டைமிங் காமெடியும், ரைமிங் கவிதையுமாக கொன்னெடுக்கிறார். செக்கச் சிவந்துவிட்டது பொண்ணு. 

நாளுக்கு நாள் தம்பி மீது பாப்பாவுக்கு கிரேஸ் கூடிக் கொண்டே போக, ஒரு கட்டத்தில் வெட்கத்தை விட்டு ‘ஐ நீட் யூ டா!’ என்று அந்த வார்த்தையை சொல்லியேவிட்டது. (நல்லா கவனியுங்க, ஐ லவ் யூ! கிடையாது. ஐ நீட் யூ!தான்.) புரிஞ்சுதா, புரிஞ்சுதா!?இதற்காக காத்திருந்த தம்பியும் ஓ.கே! ஓ.கே! என்று டபுளாய் தலையாட்டிவிட்டார். ’கேரளாவுக்கே ஸ்பெஷலான உன்னோட அந்த விஷயத்துலதான் டி நான் கெறங்கிப் போயிட்டேன்.’ என்று வெட்கப் பொண்ணை, கூசி நெளிய வைத்தார் பையன். 

‘பொண்ணு ரெடியாகி ரெண்டு மாசம் ஆயிடுச்சு, பையனும் ரெடியாகி நாலு மாசமாயிடுச்சு. ஆனால் ஷூட்டிங் முடிஞ்சால்தானே சுத்திப்பார்க்க கிளம்ப முடியும்? இல்லேன்னா ஊர் கண்ணு, உலகு கண்ணு எல்லாமே பட்டு வெச்சுடுமே. 

ஆக ஷூட்டிங் முடிஞ்சு பூசணிக்காய் உடைச்சாயிடுச்சு. இவர்களோட ஃபீலிங்ஸுக்கு ஏற்றா மாதிரி தம்பியோட அடுத்த படத்துலேயும் அம்மணிதான் ஹீரோயின். படத்தோட டைரக்டர் நம்ம தம்பியோட ஆஸ்தான ஹீரோங்கிறதாலே இவர் கண்ணடிக்க அவரோ ஹீரோயின் அம்மாவுக்கு போன் போட்டு ‘லோக்கல்லதான் போட்டோ ஷூட். டே நைட் எஃபெக்ட்ல எடுக்குறோம். இன் டோர் ஒர்க்தான். மேடத்தை மட்டும் அனுப்பி வையுங்க!’ என்றார். மம்மியும் நம்பி அனுப்பியது. 

பொண்ணு சென்னையில் போட்டோ பிடிச்சுட்டு இருக்கிறா என்று மம்மி நம்பியிருக்க, மகளோ மனம் கவர் கள்வனுடன் ஈ.சி.ஆர். வழியே சூப்பர் காரில் பெங்களூருவுக்கு பாஸ் ஆகிவிட்டார். பெங்களூரில் எந்த ஹோட்டலில் தங்கினாலும் விஷயம் வெளியே தெரிந்துவிடுமென்பதால் புறநகரில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் செட்டிலாகிவிட்டார்கள். 

ரெண்டு நாளா பொண்ணும், பையனும் மட்டுமே கலந்து கொண்ட பிரத்யேக போட்டோ ஷூட். விதவிதமான ஆங்கிளில் ஹீரோயினை ‘சுட்டு’த்தள்ளிவிட்டார் ஹீரோ. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு தாங்கும் எனுமளவுக்கு ஏக்கம் பொங்கிப் பொங்கி வழிந்து தீர்ந்தது. 

மூன்றாம் நாள் காலையில் சென்னையில் மம்மி தங்கியிருந்த ஹோட்டலின் லாபியில் பொண்ணை பத்திரமாக டிராப் செய்தது யூனிட் கார். பொண்ணை ஓடோடி வந்து பார்த்த மம்மி கேட்டார்...’ஏண்டா கண்ணு, போட்டோ எடுத்ததுக்கே இப்டி டல்லாயிட்ட! சரியா சாப்பிடலையா?’ன்னு. சிரித்து சமாளித்தது பாப்பா. 

என்னம்மா, இப்டி நம்புறீங்களேம்மா!?