குணச்சித்திர நடிகையாக அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ரேஷ்மா.  இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி, ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகிவிட்டார்.

அவ்வப்போது,  சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, படவேட்டை நடத்தி வருகிறார்.

 இந்நிலையில் இவர் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு தகவல் கடந்த சில மாதமாக வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து ஒருமுறை கூட ரேஷ்மா, வாய் திறந்து பேசியதே இல்லை.

நடிகை ரேஷ்மாவிற்கு, அவருடைய பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமண வாழ்க்கை சரியாக அமையாமல் கணவரை விட்டு பிரிந்தார். பின் அமெரிக்கா சென்ற இவர், அவ்வபோது திரைப்படங்கள் நடிப்பதற்காக மட்டுமே இந்தியா வந்து சென்றார்.

 மேலும் அமெரிக்காவில் ரேஷ்மாவிற்கு,  ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு,  இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர்.  இருவருக்கும்  அழகிய ஆண்குழந்தை ஒன்றும் பிறந்து இறந்தது. இதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீரோடு அவர் கூறியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

இதை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக தற்போது கணவருடன் சேர்ந்து வாழாமல் இருக்கும் ரேஷ்மா, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். மேலும் ரேஷ்மா நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை  காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும், ஒரு சில தகவல்கள் உலா வருகிறது.

இதனை ரேஷ்மா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், அடிக்கடி நிஷாந்துடன், நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், அதே போல் நிஷத்துடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு லவ் யு என்பதை குறிக்கும் விதத்தில் ஹார்ட் சிம்பல் போட்டு யு என டைப் செய்து நிஷாத் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ரசிகர்கள் தொடர்ந்து ரேஷ்மாவிடம் நீங்கள் திருமணத்திற்கு தயாராகி விட்டீர்களா என்றும், நிஷாத்தை காதலிக்கிறீர்களா என்றும் கேள்வி எழுப்பு வருகிறார்கள். இதற்கு ரேஷ்மா விரைவில் பதில் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

View this post on Instagram

❤ U @nishanthravichandran

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on Jan 23, 2020 at 9:31pm PST