பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல்,  வெளியேறியுள்ளவர் நியூட்ரல் ரேஷ்மா. இவர் திடீர் என வெளியேற்றப்பட்டது, ரசிகர்களை மட்டும் அல்ல போட்டியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது

இவர் வெளியேற்றப்பட்டதால், இவரை நாமினேட் செய்த முகேன் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகி அழவே ஆரம்பித்து விட்டார். இது ஒரு புறம் இருக்க நேற்றைய தினம் சரவணனை வெளியேற்றியதும், மாபெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக, ரேஷிமா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு. ரசிகர்களுக்கு தான் மிகவும் நன்றி கடன் பட்டிருப்பதாக எமோஷ்னலாக பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் சாக்ஷி தான் வெளியேறுவார் என, பலரும் எதிர்பார்த்த நிலையில், ரேஷிமா வெளியேறினார். மேலும் இந்த வாரமும் நாமினேஷன் லிஸ்டில், சாக்ஷி சிக்கியுள்ளார். இந்த வாரம் இவர் வெளியேறுவாரா அல்லது ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.