Asianet News TamilAsianet News Tamil

'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு' பாடலை போல் விடுமுறையை கொண்டாட வெளியான 'ரேணிகுண்டா' நிஷத்தின் ஆல்பம் பாடல்!

ஊரடங்கு, சமூக விலகல், மாஸ்க்குகளிலிருந்து விடுபட்டு மக்கள் வாழ்க்கையைக் கொண்டாட நண்பர்கள் ஆண்டனி வாங் மற்றும் ரேமண்டுடன் சேர்ந்து பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  'ரேணிகுண்டா' நிஷாந்த் மோஹந்தாஸ்.
 

renikunda nishanth release the week end k pop style album song
Author
Chennai, First Published Jul 15, 2021, 8:21 PM IST

ஊரடங்கு, சமூக விலகல், மாஸ்க்குகளிலிருந்து விடுபட்டு மக்கள் வாழ்க்கையைக் கொண்டாட நண்பர்கள் ஆண்டனி வாங் மற்றும் ரேமண்டுடன் சேர்ந்து பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  'ரேணிகுண்டா' நிஷாந்த் மோஹந்தாஸ்.

ஜீன்ஸ் படத்தில் 'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு' பாடலுக்குப் பின் பிரத்யேகமாக விடுமுறையக் கொண்டாட பாடல் இல்லையே என்ற ஏக்கத்தை தங்களின் பாப் பாடல் நிறைவேற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

renikunda nishanth release the week end k pop style album song

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ரேணிகுண்டா படத்தில் தான அறிமுகமானேன். அந்தப் படம் எனக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. அதன் பின்னர் நிறைய படங்கள் நடித்துவிட்டேன். ஆனால், இயல்பில் நான் ஒரு நடனக்கலைஞர். எனது நடனத் திறமையை சினிமாத்துறையில் நிரூபிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆனால் அதற்கான வாய்ப்பு திரையில் இதுவரை அமையவில்லை. 

அப்போதுதான் ஆல்பம் தயாரிக்கும் யோசனை வந்தது. 
இசையமைப்பாளர் V2 விஜய் விக்கி மற்றும் பினு ஜேம்ஸுடன் பேசினேன். நானும், அண்டனியும், ரேமண்டும் வெறும் நடனமாக யோசித்துவைத்திருந்த ஒரு திட்டத்துக்கு இசையமைத்து உயிர் கொடுத்தார் V2 விஜய் விக்கி. பினு ஜேம்ஸ் தயக்கமேதுமின்றி தயாரிப்பில் இறங்கினார். எங்கள் கூட்டு முயற்சியில் வீக் எண்ட் 'கே பாப்' ஸ்டைலில் ஆல்பம் உருவாகிவிட்டது.
 

renikunda nishanth release the week end k pop style album song
பாப் ஆல்பம் வீடியோ உருவாக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. வீக் எண்ட் மூலம் அதை நிறைவேற்றியுள்ளோம். எல்லா பாப் ஆல்பங்களிலும் வெஸ்டர்ன் ஸ்டைல் உருவாக்கத்தின் தாக்கம் தான் இருக்கும். ஆனால், நாங்கள் ஆசிய ஸ்டைல் மேக்கிங் தாக்கத்தோடு 'கே பாப்' ஸ்டைலில் ஆல்பம் உருவாக்கியுள்ளோம். 

என்னுடன் இந்த ஆல்பத்தில் ஆண்டனி வாங், ரேமண்ட் இணைந்து நடனமாடியுள்ளனர். பாடல் வரிகளை கு.கார்த்தி இயற்றியுள்ளார். V2 விஜய் விக்கி இசையமைத்துள்ளார். கவுசிக் கிரிஷ் பாடியுள்ளார். ஆண்டனி வாங் நடனத்தை வடிவமைத்துள்ளார். நான் தான் ஆல்பத்தை இயக்கியுள்ளேன். பினு ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஷ்வந்த் தயாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலரிஸ்டாக சுரேஷ் ரவி பணியாற்றியுள்ளார்.
 எடிட்டிங் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் தீபக் துவாரக்நாத்.

இந்த ஆல்பம் உருவாக்கத்தில் இணைந்துள்ள நாங்கள் அனைவருமே நண்பர்கள். நட்பு என்ற ஒரு புள்ளி தான் எங்களை இணைத்து இன்று புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் இனியும் இதுபோன்ற ஆல்பங்களில் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறோம்.
எங்களின் WeekEnd வீக் எண்ட் ஆல்பம் நிச்சயமாக கொரோனா ஊரடங்கால் தவித்துவருவோருக்கு ஒரு ஸ்டரெஸ் பஸ்டராக இருக்கும். இந்த பாடல் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios