இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தின் சிவகார்த்திககேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள, ரெமோ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்நிலையில் இப்படத்தை பற்றி திரையுலகில் புது பிரச்சனையையும் எழுந்துள்ளது. இந்த பிரச்னையை நியாயமாகவும் கவனிக்க பட்டு வருகிறது.

அது என்னவென்றால், தமிழில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்து வருகிறது.

இதனால் எஸ்.எம்.எஸ் என்று பெயர் வைக்க பட்ட படம் சிவா மனசுல சக்தி, மாஸ் என்கிற பெயர் மாசிலாமனி என மாறியிருந்தது. உதயநிதியின் கெத்து, மனிதன் படங்களுக்கு வரி விலக்கு மறுக்கப்பட்டது.

ஆனால், சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படத்திற்கு, தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. இது தான் தற்போது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.

ரெமோ என்பது தமிழ் வார்த்தை இல்லை, இதற்கு எப்படி வரி விலக்கு அளிக்கப்பட்டது என தமிழ் திரைப்பட உலகை சேர்ந்த பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.