சின்ன திரையில் போட்டியாளராக அறிமுகம் ஆகி, பின் அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறியவர் சிவகார்த்திகேயன். சின்ன திரையில் இருந்து வந்த எந்த ஒரு நடிகரும் வெள்ளி திரையில் இந்த அளவிற்கு உயர்ந்தது இல்லை.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் அதை முறியடித்து சாதனை படைத்தது வருகிறார்.

இப்போதெல்லாம் சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே ஹிட் ஆகி விடும் என்ற நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நேற்று வெளியான ரெமோ படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கொடுத்துள்ளனர் ரசிகர்கள்.

இப்படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது, சென்னையில் ஏதோ ரஜினி, அஜித், விஜய் படம் போல் காலை 5 மணி காட்சிம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ 7-8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ தான் இடம்பிடித்துள்ளது.

மேலும், இருமுகன் முதல் நாள் ரூ 5.5 கோடி, 24 படம் ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.