Release is the thriller of Vikram-Veda film

ஓரம்போ, வா குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்களின் இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் படம் 'விக்ரம் வேதா'.

இப்படத்தில் மாதவன் போலீஸாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இப்படம் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கிறது, மாதவனும், விஜய்சேதுபதியும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் எப்போ ரிலீசாகும் என்று ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கிய ஓரம்போ, வா குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.