Release date of spider Music release is ready for grand finale
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'ஸ்பைடர்'.
இந்தப் படம்,ம் முதலில் ஜுன் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் பல வேலைகள் முடிவடையாததால் படத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம் என்று அறிவித்துள்ளது படக்குழு.
“படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு பத்து நாள்களுக்கு முன்பாக முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது என்பதால் இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போகலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.
சுமார் 110 கோடி ரூபாய் செலவில் தமிழ், தெலுங்கில் படமாக்கப்பட்டு வரும் 'ஸ்பைடர்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. படத்தை மிகப் பெரும் அளவில் வெளியிட இப்போதே வேலைகளை ஆரம்பித்துவிட்டார்கள் என்பது கொசுரு தகவல்.
