rejina casandra about sexual harresment in chennai

கடந்த சில மாதங்களாக பிரபல நடிகைகள் தானாகவே முன் வந்து தங்களுக்கு நேர்ந்த, பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் ரெஜினா கேசன்ரா. தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஆர் கூறுகையில், ஒரு நாள் நான் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் அருகே நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்ததாகவும், அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டதாகவும் அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இருந்து மீள தனக்கு சில நிமிடம் ஆனது என்றும், பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்து அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினாராம்.

இதே போல் தனக்கு மூன்று நான்கு முறை நிகழ்ந்துள்ளதாகவும், இதற்காக நான் அழுதது மட்டும் இன்றி அவகளை கண்டித்து அடித்தும் உள்ளேன் என கண்கள் கலங்கியபடி கூறியுள்ளார் ரெஜினா.