Recurring tour This time in India ...
இசை உலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவில் இசைச் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருதுகளை வென்ற இசைப்புயல் இசையமைப்பாளர் ரோஜா படத்திற்கு முதல் முறையாக இசையமைத்தார்.
அப்படத்திற்கு இசையமைத்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தியாவின் முக்கிய பெருநகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார் ரஸ்மான். இதற்காக ’என்க்கோர்’ என்ற இசை சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
முதல் கட்டமாக, வரும் 26-ஆம் தேதி ஐதராபாத்தில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். பின்னர், டிசம்பர் 3-ஆம் தேதி அகமதாபாத்திலும், டிசம்பர் 17-ஆம் தேதி மும்பையிலும், டிசம்பர் 23-ஆம் தேதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கும்.
இதில், அவருடன் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக இசை சுற்றுப் பயணத்தை படமாக எடுத்து ஒன் ஹார்ட் என்று வெளியிட்டார். அதேபோன்று இந்த சுற்றுப் பயணத்தையும் படமாக வெளியிடுவாரோ?
