Asianet News TamilAsianet News Tamil

இந்து மதத்தை இழிவுபடுத்தும் ‘சர்கார்’... மலேசிய மக்களும் மறு சென்ஸார் கேக்குறாங்க...

உள்ளூர் பிரச்சினைகளிலிருந்து ஓரளவு கரையேறியிருக்கும் நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு லேட்டஸ்டாக மலேசிய மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் கிருஷ்ணர் சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அதை நீக்கி மறு சென்ஸார் செய்தபிறகே படத்தை வெளியிடவேண்டும் என்றும் மலேசிய மக்கள் தெரிவித்துள்ளனர்.

recensor for sarkar at malesia
Author
Chennai, First Published Nov 16, 2018, 11:44 AM IST

உள்ளூர் பிரச்சினைகளிலிருந்து ஓரளவு கரையேறியிருக்கும் நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு லேட்டஸ்டாக மலேசிய மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் கிருஷ்ணர் சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அதை நீக்கி மறு சென்ஸார் செய்தபிறகே படத்தை வெளியிடவேண்டும் என்றும் மலேசிய மக்கள் தெரிவித்துள்ளனர்.recensor for sarkar at malesia

 மலேசிய மக்களிடம் அரசல்புரசலாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் இந்து கடவுள் ‘கிருஷ்ணர்’ சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் டத்துக் ஆர்.எஸ்.மோகன் ஷான் புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக மலேசிய தணிக்கை வாரியத்திடமும் அவர் புகார் கொடுத்தார். இந்துக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தணிக்கை வாரியத்திடம் மனு கொடுத்தார்.recensor for sarkar at malesia

இதுகுறித்து உடனடியாக ஆலோசனை நடத்திய மலேசிய தணிக்கைக் குழு, சர்ச்சைக்குரிய கிருஷ்ணர் சிலை விவகாரத்தை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது. மலேசியாவிலும் இப்படத்திற்கு மறு சென்ஸார் நடந்த நிலையில் கிருஷ்ணர் சிலை காட்சி நீக்கப்பட்ட சர்கார் படம் நாளை ரிலீஸாகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios