மருத்துவமனையில் பிரபல நடிகை...  உதவி கேட்டது சல்மான் கானிடம் ..ஆனால் உதவியது  ரவி கிஷன் ...

சல்மான் கானுடன் நடித்த பிரபல பாலிவுட் நடிகை பூஜா  தட்வால் தற்போது காச நோயால் பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் ச சிகிச்சை பெற்று வருகிறார்.வீர்கடி என்ற அப்படத்தில் சல்மான் கானுடன் நடித்துள்ளார் பூஜா.

மேலும்,இந்துஸ்தான், சிந்தூர் கி கவுகாந்த் உள்ளிட்ட  பல படங்களில் நடித்துள்ள இவர்,கடந்த 6  மாத  காலமாக  காசநோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளார்.

தற்போது மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரின் உடல் நிலை மோசமானதால், இதனை அறிந்துக்கொண்ட கணவர் மற்றும் உறவினர் அவரை விட்டு பிரிந்து சென்று உள்ளனர்.

இந்நிலையில்,சாப்பிட கூட பணம் இல்லாமல், சிகிச்சை கூட பெற முடியாமல் மருத்துவமனையில் தவித்து வந்தார்.

பின்னர் ஒரு வீடியோ மூலம், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற கூட முடியாத  நிலையில் தான் தவித்து  வருவதாகவும்  தனக்கு உதவ வேண்டும் என்பதற்காக  நடிகர் சல்மான் கானிடம் தான் உதவி  கேட்க  முற்பட்டதாகவும், ஆனால் முடியாத காரணத்தால் தற்போது வீடியோ வெளியிடுவதாகவும், இந்த வீடியோவை சல்மான் கான் பார்த்தால் கண்டிப்பாக எனக்கு  உதவுவார் என தெரிவித்து இந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.....

இந்த வீடியோவை, பலரும் சமூக வலைத்தளங்களில் வெகுவாக பரவி வந்தனர்.

இந்த வீடியோவை பார்த்த இந்தி நடிகர் ரவி  கிஷன், தனது உதவியாளர்களை  மருத்துவமனைக்கு அனுப்பி பண உதவி செய்துள்ளார்

பூஜா  தட்வாலும், ரவி கிஷனும் 1997 ஆம்  ஆண்டு வெளியான தம்ஸ் பியார் கோ கையா என்ற படத்தில் இணைந்து  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை பூஜா,சல்மான் கான் கண்டிப்பாக தனக்கு உதவுவார் என நம்பிக்கையாக இருந்த நிலையில்,  ரவி கிஷன் முன்வந்து உதவி இருப்பது அனைவரையும் நெகிழ வைத்தது.

ஆனால் இதுவரை,சல்மான் கான் இவருக்கு உதவி செய்ய முன்வர வில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.