GuluGulu Review : ரத்ன குமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி இருக்கும் குலுகுலு திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம், ஹீரோவாக நடிக்கத்தொடங்கிய பின் காமெடி வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், ஏ1, தில்லுக்கு துட்டு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படங்களாக அமைத்தன.

ஆனால் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த பிஸ்கோத், டிக்கிலோனா, சபாபதி ஆகிய படங்கள் வரிசையாக பிளாப் ஆகின. இதனால் இவரது மார்க்கெட்டும் சரியத் தொடங்கியது. இதையடுத்து ஆடை, மேயாதமான் போன்ற படங்களை இயக்கிய குலுகுலு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சந்தானம். இப்படத்தை அவர் மலைபோல் நம்பி இருந்தார்.

இதையும் படியுங்கள்... உதயநிதி ரிலீஸ் செய்த சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் பாதியில் நிறுத்தம் - என்ன பிரச்சனை தெரியுமா?

டார்க் காமெடி கதையம்சத்துடன் தயாராகி இருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் சந்தானம் கம்பேக் கொடுத்தாரா அல்லது இதுவும் அவரது பிளாப் படங்களின் பட்டியலில் இணைந்ததா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அந்த வகையில் டுவிட்டரில் ரசிகர்கள் தெரிவித்து வரும் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

அதன்படி நெட்டிசன் ஒருவர், சந்தானம் நன்றாக நடித்திருப்பதாகவும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அமேசிங் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி காமெடி ஆங்காங்கே ஒரு சில இடத்தில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும், திரைக்கதையின் நிறைய தொய்வு இருப்பதாக பதிவிட்டுள்ளார். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் என டுவிட் செய்துள்ளார்.

Scroll to load tweet…

அதேபோல் சந்தானத்திற்கு இது மற்றுமொரு பிளாப் படம் என்று ஒருவரும், இந்த ஆண்டின் மிகவும் மோசமான திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ள ஒருவர், ரத்ன குமார் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட டைரக்டர் என சாடி உள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

இன்னொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், ரத்ன குமார் படம்னு நம்பி போனதாகவும், அங்கங்க காமெடி தவிர குலுகுலு படத்துல ஒன்னுமே இல்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார். சந்தானமே படம் முழுக்க காமெடி பண்ணியிருக்கலாம் என்றும், இப்படி படம் பண்ணா அடுத்து எப்படி வருவோம் என கேள்வி எழுப்பி உள்ளார். ரொம்ப எதிர்பார்த்து போனதாகவும் படம் திருப்தி அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொருவர் நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், இயக்குனர் ரத்னகுமார் சந்தானத்தின் கெரியரை முடிவுகட்டும் வகையில் இந்த படத்தை எடுத்து வைத்துள்ளதாக சாடி உள்ளார். இதற்கு லெஜண்ட் படம் எவ்வளவோ மேல் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், 2-ம் பாதி தான் படத்தை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார். ஓகே ரகமாக இப்படம் இருப்பதாகவும், சந்தானம் கேரக்டர் சூப்பர் எனவும் சற்று பாசிடிவ்வாக பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஒருவர் குலுகுலுவில் என்னடா காமெடியே இல்ல என கிண்டலடித்துள்ளார். மற்றொருவர் மீண்டும் ரத்னகுமாரை தேர்ந்தெடுக்காதீர்கள் என சந்தானத்திற்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அனைத்தும் கிரிஞ் காமெடியாக இருந்ததாகவும், தியேட்டரே அமைதியாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சந்தானத்தின் நடிப்பு மற்றும் சந்தோஷ் நாராயணனின் இசைக்காக மட்டும் படத்தை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…

மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் பெரும்பாலும் நெகடிவ் விமர்சனங்களே வந்துள்ளன. இதன்மூலம் இதுவும் சந்தானத்திற்கு ஒரு தோல்வி படமாகவே அமைந்துள்ளது போல் தெரிகிறது. 

இதையும் படியுங்கள்... இதுதான் எங்க முதல் குழந்தை... வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் அனிதா சம்பத்