rathika met sexual harresment
பிரபல நடிகரின் குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகையாக வந்தவர் நடிகை ராதிகா. இவர் ரஜினி, கமல், என 90 களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக குணச்சித்திர வேடத்திலும் கலக்கி வருகிறார்.
இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகைகள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் Me too என்று பதிவு செய்து தாங்களும் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளானவர்கள் என்று தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நடிகை ராதிகாவும் தன்னுடைய டுவிட்டரில் பெண்களே நீங்களும் பாலியல் கொடுமைகளை அனுபவித்தால் Me too என்று பதிவு செய்யுங்கள் எனக் கூறி, அவரும் அப்படியே பதிவு செய்துள்ளார். பிரபல நாயகியான இவருக்கும் இப்படி நடந்திருக்கிறதா என்று தங்களது வருத்தத்தை திரையுலகினர் பலரும் தெரிவித்து வருகின்றனர்.
