rathika face some problems for rajinikanth

நடிகை ராதிகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் 90களில் நாயகியாக நடித்த முன்னணி நடிகை. தற்போதும் நடிப்பை விடாமல், தற்போதைய முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அதே போல் தன்னுடைய கணவரின் அரசியல் கட்சியிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அனைவரிடமும் பரவலாக இருந்து வரும் கேள்வி என்றால், அது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பது தான். கடந்த ஐந்து தினங்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வரும் இவர் நாளை தன்னுடைய அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இதற்கு முன் ரசிகர்களை சந்தித்த போது போருக்கு தயாராகுங்கள்... அரசியலில் மாற்றம் வர வேண்டும் என ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு தற்போதுதான் இது குறித்து பேசவே ஆரம்பித்துள்ள ரஜினிகாந்த் நாளை என்ன பதில் சொல்வார் என்பது தான் அரசியல் தலைவர்களிடம் கூட மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

ரஜினிகாந்தின் நாளைய பேட்டிக்காக தமிழ்நாடே ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து இது குறித்துப் பேச அதிகாலை 4 மணிக்கே ஒருவர் போன் செய்து ரஜினிகாந்த் பற்றி பேச சொன்னாராம். இதுகுறித்து ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் முதலில் ரஜினிகாந்த் முடிவு செய்யட்டும்; பிறகு பேசலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…