rathidha acting new seriyal for chandrakumaari
தமிழ் ரசிகர்கள் மனதில், கதாநாயகியாக அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர் நடிகை ராதிகா. எப்போது தயாரிப்பு, அரசியல், நடிப்பு என தன்னை பிஸியாகவே வைத்துக்கொள்ளும் இவர், பல வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில், தன்னுடைய தயாரிப்பிலேயே சீரியல் தயாரித்து, அதில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்து இது வரை வெளியாகியுள்ள, 'அண்ணாமலை', 'சித்தி', 'வாணி ராணி' உள்ளிட்ட சீரியல்கள் ஒவ்வொன்றும் மூன்று வருடங்களை கடந்து ஒளிபரப்பானவை. இவர் நடிக்கும் சீரியல்களை மிஸ் பண்ணாமல் பார்க்கும் பல ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில் விரைவில் 'வாணி ராணி' சீரியல் முடிவடைய உள்ளது. இந்த சீரியலை தொடந்து ராதிகா வரலாற்று சிறப்பு மிக்க, பிரமாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள தொடரில் நடிக்க உள்ளார். 'சந்திரகுமாரி' என்று பெயரிடப் பட்டுள்ள இந்த சீரியலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். தற்போது இந்த சீரியலின் படப்பிடிப்புகள் படு வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
