சினிமாக்காரர்களை ஏமாற்றாமல், நாட்டின் வளர்ச்சியை கவனியுங்கள்.. YSR காங்கிரஸ் கட்சியை சாடிய நடிகர் சிரஞ்சீவி!

இயல்பாகவே மிக மிக அமைதியாக காணப்படும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ஒரு விழாவில் பேசிய பொழுது YSR காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசியுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rather Targeting Cinema Stars focus in state development actor chiranjeevi slams ysrcp

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் சிரஞ்சீவி, ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்திய மொழிகளில் பலவற்றுள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் களத்திலும் பல உயர் பதவிகளை வகித்து வந்துள்ளார் சிரஞ்சீவி.

கடந்த 2008ம் ஆண்டு பிரஜை ராஜ்ஜியம் கட்சி என்ற ஒரு கட்சியை அவர் ஆந்திராவில் துவங்கியதும் நினைவுகூறத்தக்கது. இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், மாநிலத்தை ஆளும் YSR  காங்கிரஸ் கட்சி, சினிமாகாரர்களை ஏமாற்றுவதை விட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பல விஷயங்களை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்று கடுமையாக சாடி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியா முழுவதும் என் வீடுதான்! 4 மாதங்களுக்குப் பின் பழைய எம்.பி. பங்களாவுக்குத் திரும்பும் ராகுல் காந்தி!

தெலுங்கு திரை உலகினருக்கும், ஆந்திர அரசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக ஆந்திரா அரசு புதிதாக திட்டமிட்டுள்ள டிக்கெட் விலை கட்டுப்பாடுகள் மற்றும் படப்பிடிப்பு கட்டுப்பாடுகள் தான் இந்த சிக்கல்களுக்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. 

இது தவிர புது பட வெளியீட்டும்போது அவற்றின் டிக்கெட் விலை குறித்த சிக்கல்கள் நிலவி வருவதாகவும், இதனால் பல தெலுங்கு தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதாகவும் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது. மாநிலத்தை ஆளும் YSR காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நடிகர் சிரஞ்சீவி பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் சிரஞ்சீவியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி கோவிலில் படுத்து உருண்ட ரஜினி ரசிகர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios