Rasul Pookutty Start his sound effect for Rajinikanth 2.0
ஏஸியா நெட் தமிழ் இணையதளம் தனது சினிமா கேட்டகரியில் உங்களுக்காக அடுத்து கொண்டு வருவதும் மற்றொரு பிளாக் பஸ்டர் ஹிட்டின் பார்ட் -2 பற்றிய தகவல்தான்.
ரஜினி - ஐஸ்வர்யா ராய் காம்போவில், ஷங்கரின் ஜைஜாண்டிக் மேக்கிங்கில் இந்திய திரையுலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘எந்திரன்’. நாளைய உலகம் ரோபோக்களால் ஆனது, ஆனால் ரோபோக்களில் வில்லன்களும் மனிதனின் குரூர மூளையால் உருவாக்கப்படுவார்கள்... என்கிற எளிமையான கான்செப்டை மிரட்டல் ஸ்க்ரீன் பிளேயுடன் படைத்திருந்தார் ஷங்கர்.
இப்போது 2.0 எனும் பெயரில் உருவாகி வரும் எந்திரனின் பார்ட் 2 வுக்கான பக்கவாட்டு பணிகள் படு பறத்தலாக நடந்து கொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமானதான சவுண்ட் ரெக்கார்டிங் பணிகளை துவக்கியிருக்கிறார் ஆஸ்கர் நாயகனான ரெசூல் பூக்குட்டி.
தனது டீமோடு தன் பணி துவங்கியிருப்பதை போட்டோவோடு அப்லோடியிருக்கும் ரெசூல் ‘2.0வுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் சவுண்ட் எஃபெக்ட்கள் ஆஸமாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.’ என்றும் மகிழ்ந்திருக்கிறார்.
டாட்!
