குடும்ப கதைகளை உருவாக்குவதிலும், அதற்கு செம்ம சென்டிமெண்டாக  ஸீன்ஸ் மற்றும் டயலாக் எழுதுவதிலும், துளி ஆபாசமோ அல்லது ஆக்‌ஷனோ இல்லாமல் சூப்பர் ஹிட் மூவியை கொடுக்க முடியும் என்று பல முறை நிரூபித்தவர் இயக்குநர் விசு. ஆனால் அவரே அந்த காலத்தில் செம்ம காமம் தெறிக்க கதை வசனம் எழுதியிருந்த படம்தான் நெற்றிக்கண்! என்பது சமீபத்தில் அவருக்கும், பாலசந்தரின் மகளுக்கும் நடந்த கருத்து மோதலில்தான் தெரிந்தது. பிரச்னைக்கு காரணம், அப்படத்தின் உரிமையை தனுஷுக்கு விற்றுவிட்டதாக எழுந்த தகவல்தான். இந்நிலையில் ‘அப்படத்தை ரீமேக் செய்யும் எண்ணமே தனக்கு இல்லை. படத்தின் உரிமையை நான் வாங்கவுமில்லை, அது பற்றி யாரிடமும் பேசவுமில்லை.’ என்று  தனுஷே தன்னிடம் சொல்லிவிட்டதாக விசு கூறி, சமாதானம் ஆகியிருக்கிறார். 
(கோதாவரி அந்த கேட்டை இழுத்து மூடுடி!)

*    பாகுபலிக்குப் பிறகு  மீண்டும் ஒரு தாறுமாறு ஹிட் படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரபாஸ், சாக்கோவில் சறுக்கினார். இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பை லிங்குவல் படமொன்றில் நடிக்கிறார். இதை வைஜெயந்தி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்காவை டிக்கடிக்க சொல்லி நாக் அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரெக்கமண்ட்ஸாம் ரசிக கோடிகள். 
(அடேய் பாகு, அனுஷை மட்டும் கழட்டிவிட்ட! பிய்ச்சுப் போடுவோம் பிய்ச்சு)

*    தமிழ், தெலுங்கு என இரண்டு ஜானர்களிலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த சமந்தாவுக்கு ’ஜானு’ படம் பப்படமாகிப் போனது. விமர்சன ரீதியாக ஓரளவு பெயர் வாங்கினாலும், பாக்ஸ் ஆபீஸில் பஞ்சராகிப் போனது இந்தப்படம். விளைவு, புதிதாக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஒரு தெலுங்குப் படத்திலிருந்து சமந்தாவுக்கு கல்தா கொடுத்துவிட்டு, அதிதிராவை டிக் அடித்துவிட்டனர். 
(மாமனார்ட்ட சொல்லி அவனுங்களை பீஸ் பீஸாக்கிடலாம் பேபி)

*    தமிழில் தற்போதைக்கு திறமையான, அழகான இளம் நடிகைகள் இல்லை! எனும் நிலை உருவாகியிருப்பதை மிக துல்லியமாக டார்கெட் செய்து, ஏகப்பட்ட ரியாக்‌ஷன்களுடன் ஃப்ரெஷ் போட்டோ ஷூட் நடத்தி, லவ் பண்ணுனா தளபதி விஜய்யை தான் பண்ணுவேன்! என்று எக்ஸ்ட்ரா பிட்ஸ்களைப் போட்டபடி உள்ளே நுழைகிறார் ராஷ்மிகா. வடிவேலுவை குஷிப்படுத்தியதெல்லாம் இந்த டார்கெட்டின் ஒரு அங்கம்தானாம். எப்படியும் ஏழெட்டு வருடத்துக்கு செமத்தியான ரவுண்டு வந்தே ஆவது எனும் முடிவிலிருக்குது பொண்ணு. 
(வெற்றிட்த்தை நிரப்ப வரும் வெள்ளை எலியே!ஸாரி வெள்ளை கிழியே வருக வருக)