கன்னடம், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அந்த ஒரே படத்தில் இந்தியா முழுவதும் பிரபலமானார். அந்த படத்தில் இடம் பெற்ற ’இங்க்கம், இங்க்கம்’ படலுக்கு டிக்டாக் பண்ணாத பெண்களே இல்லை என்னும் அளவிற்கு ஒரே பாடலில் உலக புகழ் பெற்றார் ராஷ்மிகா. அதில் ராஷ்மிகா, விஜய் தேவகொண்டாவுடன் ’லிப்லாக்’ சீனில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

மறுபடியும் விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தெலுங்கில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்த “சரிலேறு நீக்கெவரு”,  “பீஷ்மா”  ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன. இதனால் சம்பளத்தை கோடிகளில் ஏற்றி கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் "சுல்தான்" படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வந்தார். கொரோனா பிரச்சனை காரணமாக அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கன்னடத்தில் பிரபல நடிகரான துருவா சார்ஜா உடன்  “பொகரு” என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால்  கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்து கராபு என்ற பாடலை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

கேங்ஸ்டரான துருவா, ராஷ்மிகா மந்தனாவை தன்னை காதலிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற அந்த பாடல் யூ-டியூப்பில் வைரலாகியுள்ளது. ஆனால் அந்த பாடலில் தன்னை காதலிக்க மறுத்தால் நாக்கை வெட்டுவேன், முடியை அறுப்பேன் போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: அந்த இடத்தில் அசத்தல் மச்சம்... மாளவிகா மோகனனின் ஹாட் செல்ஃபியால் வெளியான மர்மம்...!

மேலும் ராஷ்மிகா மந்தனாவை பலவந்தமாக கட்டியணைப்பு, தேவையில்லாத இடங்களில் கைவைப்பது போன்ற சீன்கள் பெண்களை அவமதிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளன. இதற்கு கன்னடத்தைச்  சேர்ந்த பெண்கள் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளதாம். அதேபோல் ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்களும் ஏன் இப்படிப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கடுப்பில் உள்ளனராம்.