Rashmika Mandanna: விமான நிலையத்தில் ராஷ்மிகாவிடம் அத்துமீறிய ரசிகர்கள்; ராஷ்மியின் செயலால் நெகிழ்ந்த ரசிர்கள்
மும்பை விமான நிலையத்தில் செல்பி எடுப்பதற்காக சூழ்ந்து கொண்ட ரசிகர்களால் நடிகை ராஷ்மிகா மந்தனா சற்று அசௌகரியப்பட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மொழியில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் அறிமுகமாகி விஜய்யின் வாரிசு படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தர். ஆனால் துரதிர்ஷ்டவிதமாக இந்த இரு படங்களிலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவருடன் இணைந்து செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவின் கையை பிடித்து செல்பி கேட்டார். அப்போது அவர் ஒரு நிமிடம் அசௌகரியமாக உணர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் புன்னகையுடன் கடந்து சென்றார். ராஷ்மிகாவின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.