Asianet News TamilAsianet News Tamil

#RashmikaMandanna மேல் சட்டை இல்லாத புகைப்படம் ஏன் ப்ரொபைலாக இருக்க வேண்டும் ? கீதா கோவிந்தம் நாயகி கேள்வி

காதலுக்கு வயது ஒரு தடை இல்லை என கீதா கோவிந்தம்  நடிகை ரஷ்மிகா சமீபத்தில் நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

Rashmika interview about falling in love with someone younger than
Author
Chennai, First Published Nov 14, 2021, 12:43 PM IST

2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தில் விஜய் தேவரக்கொண்டாவுடன் இணைந்து நடித்தவர் ரஷ்மிகா  மந்தனா. தமிழ் தெலுங்கு என மிகப்பெரிய வெற்றியை தட்டி சென்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கி படு பிஸியான ரஷ்மிகா  டியர் காம்ரேட், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதை தொடர்ந்து இரண்டு பாகங்களாக  வெளியாக உள்ள அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா திரைப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா.  அதோடு ஹிந்தியில் மிஷன் மஜ்னு நடித்துள்ளார்.

Rashmika interview about falling in love with someone younger than

முன்னதாக ரஷ்மிக்காவுக்கும் கன்னட நடிகர் ரஷீத் ஷெட்டிக்கும்  திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இருவரும் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர். 

இந்நிலையில் சமீபத்தில்  நடைபெற்ற பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஷ்மிகாவிடம் உங்களை விட வயது குறைந்தவரை காதலிப்பீர்களா என கேட்கப்பட்ட பதில் அளித்த அவர்; காதலுக்கு மொழியும், வயதும் தடையில்லை என திரட்டி பதிலை கொடுத்துள்ளார். மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் நம் எண்ணங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாத நபராக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் கவனம் இருந்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

Rashmika interview about falling in love with someone younger than

மேலும் சமீபத்தில் எல் சட்டை இல்லாமல் ரஷ்மிகா வெளியிட்ட புகைப்படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ;  நன்றாக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதை தான்  பாராட்டுவதாகவும்,. அது நீங்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆனால், அதை ஏன் ப்ரொபைல் படமாக வைக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios