தற்போது 60 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை டெய்சி ராணி தான் 6 வயதில் நடிக்க வந்த போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார்.

பாலியல்  வன்கொடுமை சம்பவங்களில் பாதிக்கபட்டவர்கள்  தங்களுக்கு நடந்த   இன்னல்களை வெளியே சொல்ல தயங்கி வந்த நிலையில்  Me Too  என்ற  பெண்ணிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள் அதை தைரியமாக சொல்லும போது தான் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் என இந்த அமைப்பு கூறி வருகிறது.  இதைத்  தொடர்ந்து  தங்கள் சொந்த குடும்பங்கள் மற்றும் உறவினர் கைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் இன்னல்களை வெளியிட வாய்ப்பு  கிடைத்து உள்ளது என நம்பிக்கை அடைந்து உள்ளனர்.  

இந்நிலையில் தற்போது 60 வயைதைக் கடந்துள்ள பிரபல பாலிவுட்  திரைப்பட நடிகை டெய்சி ராணி,  சினிமா மற்றும் சின்னத்திரைகளில் தற்போது சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அதிகளவில் நடிக்க தொடங்கியிருப்பது  தமக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியாக இருக்கும் போது தான் அனுபவித்த வேதனைகள் குறித்து அவர் மனம் திறந்துள்ளார். 1950-களில் சென்னைக்கு மெட்ராஸ் என பெயர். எனக்கு ஆறு வயதாக இருந்த போது மெட்ராசில் நடந்த ஒரு திரைப்பட சூட்டிங்கில் நடிக்க வந்தேன். என்னுடன் வந்த பாதுகாவலர் வெளிப்புற படப்பிடிப்பு நடந்த இடத்தில் என்னை  பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக வேதனை தெரிவித்துள்ளார்தார்.

மேலும், என்னை அடித்து உதைத்து இதை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என அந்த பாதுகாவலர் மிரட்டியதாகவும் நசீர், என்ற அந்த பாதுகாவலர்  தற்போது இறந்துவிட்டதாகவும் டெய்சி ராணி தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக இதை என் அம்மாவிடம் நான் சொல்லவில்லை  என்றும்,  தற்போது திரையுலகில் குழந்தை நட்சத்திரங்கள் அதிகம் பேர் வருவதை பார்த்தால் கவலையாக உள்ளது எனவும் டெய்சி ராணி குறிப்பிட்டுள்ளார்.