சமீபத்தில் கல்கத்தா ரயில் நிலையத்தில் பாட்டு பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல் என்கிற பெண்ணிற்கு சமூக வலைதளங்கள் மூலம் அடித்த அதிர்ஷ்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் லதா மங்கேஷ்கரின் பாடல்களை பாடி ரயிலில் பிச்சை எடுப்பதை பார்த்த பயணி ஒருவர், அவரது பாடலை செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலயத்தளத்தில் பதிவிட்டார்.  அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஒரே இரவில் அனைவராலும் அறியப்பட்ட இவரது திறமை, தற்போது இவரை பிஸியான பாடகியாக மாற்றியுள்ளது.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் இவருக்கு முதன்முதலில் பாடும் வாய்ப்பை வழங்கினார். பின்னர் பிரபல நடிகர் சல்மான்கான் இவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீட்டை பரிசாகக் கொடுத்தார். இதன் மூலம் தற்போது பல படங்களில் பிஸியாக கமிட்டாகி பல பாடல்களை பாடி வரும் இவர், கடந்த இரு தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் இவர் போட்டிருந்த மேக்அப் தான் இப்போது வைரலாக பரவ தொடங்கியுள்ளது. ஓவர் மேக்கப்பில் கண் நிறைய மை, கழுத்தில் மிகப் பெரிய சோக்கர், மற்றும் காதுகளில் பெரிய பெரிய கம்மல் என சிறு வயது பெண் போல் மாடர்ன் உடையில் தோன்றிய இவரது புகைப்படத்தை வைத்து பலர் விமர்சித்து வருகிறார்கள்.

குறிப்பாக ராணுவை, பிரியங்கா சோப்ரா, மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.