'அட்டகத்தி' படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

ரஜினிபட வாய்ப்பு:

தன்னுடைய மூன்றாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வை வைத்து இவர் இயக்கிய 'கபாலி' திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

காலா:

கபாலி வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து இவர் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், மீண்டும் ரஜினிகாந்தை வைத்து 'காலா' படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 

காலா படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது, மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரீலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அடுத்த பட ஹீரோ:

இந்த படத்தின் ரீலீஸ்க்கு பின் இயக்குனர் பா.ரஞ்சித் யாரை வைத்து படம் இயக்குவார் என்பது அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்த நிலையில். அடுத்ததாக ரஞ்சித் சூர்யாவை வைத்து படம் இயக்குவார் என கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து எந்த ஒரு அதிகாரப் பூர்வ தகவலும் வெளியாகவில்லை.