உண்மையில் ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் சிறியவர்.. பின்னர் இவர்களது காதல் விவாகரம் குறித்து ஊடகங்களில் செய்தி பரவ வேறு வழியில்லாமல் தனுஷை மாப்பிள்ளையாக்கி கொண்டார் ரஜினி என ரங்கநாதன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவின் அறிமுகமாகும் போது, பல்வேறு விமர்சனங்களை பெற்ற தனுஷ், இன்று பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு, பாலிவுட், ஹாலிவுட் என நடித்து அசுர வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறார். ஓவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து, தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எனவே இவர் நடிக்கும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. தன்னுடைய திறமையை நடிப்போடு நிறுத்தி கொள்ளாமல்... நடிப்பை தாண்டி, பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் என பிஸியாகவே வலம் வருகிறார். தற்போது இவர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ரஜினிக்கு மாப்பிளையான கதை குறித்து ரஜினியே கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறி உள்ளார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரங்கநாதன்..தனுஷ் -ஐஸ்வர்யா காதல் குறித்து அதிக கிசு கிசுக்கள் வெளியானதாலையே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தாக கூறியுள்ளார்.

16 வயதில் தனது அண்ணனான செல்வராவான் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுக மான தனுஷ் அசுரர் வளர்ச்சியடைந்தார். அந்த காலகட்டத்தில் ரஜினியின் மக்கள் ஐஸ்வர்யாவும் தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவர்களின் நட்பு பிற்காலத்தில் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கு இடையே காதல் மலர அடித்தளம் அமைத்துள்ளது. உண்மையில் ஐஸ்வர்யாவை விட தனுஷ் வயதில் சிறியவர்.. பின்னர் இவர்களது காதல் விவாகரம் குறித்து ஊடகங்களில் செய்தி பரவ வேறு வழியில்லாமல் தனுஷை மாப்பிள்ளையாக்கி கொண்டார் ரஜினி என ரங்கநாதன் கூறியுள்ளார்.