Raha Kapoor : பிரபல நடிகர் ரன்பீர் கபூரின் மகள் ராஹா கபூர் தான் இன்று நெட்டிசன்கள் கொஞ்சும் செய்தியாக மாறியுள்ளார்.

பிரபல பாலிவுட் ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் மகள் ராஹா, மிகவும் அழகான ஸ்டார் குழந்தைகளில் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்நிலையில் ராஹாவின் புதிய வீடியோ ஒன்று இன்று இணையதளத்தில் வெளியாகி, பலரது நெஞ்சங்களையும் கவர்ந்து வருகின்றது என்றால் அது மிகையல்ல. 

கடந்த நவம்பர் 2022ம் ஆண்டு பிறந்த ராஹா கபூர் இப்பொது தான் முதல் முறையாக நடக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உடலை அசைத்து அசைத்து அவர் நடந்து சென்று, தனது தந்தை ரன்பீருக்காக காத்திருந்த வீடியோ தான் இன்று ட்ரெண்டிங்கில் உள்ளது என்றே கூறலாம். ரன்பீர் மற்றும் ஆலியாவை அவர் அப்படியே உரித்து வைத்திருக்கார் என்றும் இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

மீனா குமாரி... நீங்க மட்டும் இல்லன்னா... அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

கோலிவுட் உலகின் முன்னணி நடிகரான ரன்பீர், மும்பையில் பிறந்தவர். 41 வயதாகும் அவர் கடந்த 1982ம் மிகப்பெறிய நடிப்பு குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவருக்கும் 31 வயது உடைய நடிகை ஆலியா பட்டிருக்கும் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த குழந்தை தான் ராஹா கபூர். 

Scroll to load tweet…

சமீபத்தில், நடிகர் ரன்பீர் கபூர், ராஹாவின் பிறப்பு தனது வாழ்க்கையின் "மிக உயர்ந்த தரும்" என்று கூறி ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். தனது மகளை முதன்முதலில் கையில் ஏந்திய தருணத்தை மறக்கவே முடியாது என்று அவர் கூறினார். டாக்டர் எனக்கு ராஹாவைக் கொடுத்த அந்த நொடியை விவரிக்க வேண்டும் என்றால், யாரோ இதயத்தை வெளியே இழுத்து கைகளில் கொடுத்தது போல் இருந்தது என்றார். 

3 ஆண்டுகள் வீல் சேரில் வாழ்க்கை.. எக்கச்சக்க சர்ஜரி - ஆனால் இன்று கோலிவுட் உலகின் டாப் ஹீரோ!