ranaa and prabas issue
திரைப்படத்தில் ஜென்ம விரோதிகள் போல், சண்டை போட்டு கொள்ளும் அனைத்து நடிகர்களும் நிஜத்தில் நல்ல நண்பர்களாகவே வலம் வருகின்றனர். அதே போல சினிமாவில் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொள்ளும் தோழர்கள் உண்மையில் அது போல் இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்.
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாகுபலி படத்தில் மிகவும் சீரியஸான வேடத்தில் நடித்துள்ள ராணா நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான மனிதர்.
ஒரு முறை, ' பாகுபலி 2 ' படப்பிடிப்பில் ராணா, பிரபாஸுக்கு போன் செய்து, நான் போலீசிடம் மாட்டிக் கொண்டேன். நேரில் வந்து கொஞ்சம் உதவுங்கள் என்று பதட்டமாக கூறியிருக்கிறார்.
ராணாவின் விளையாட்டு தனத்தை அறிந்த பிரபாஸ், 'பாகுபலி 2 'படத்தில் என்னுடன் நடித்துள்ளதாக கூறு போலீஸ் உன்னை விட்டுவிடுவார் என்றும் தன்னால் இப்போது உன்னை வந்து காப்பாற்ற முடியாது எனக்கு தூக்கம் வருகிறது என கூறியுள்ளார்.
இந்த விஷயத்தை சமீபத்தில் ராணா கூறியுள்ளார்.
