'பாகுபலி' திரைப்படம் மூலம், உலக அளவில் பிரபலமானவர் நடிகர் ராணா. இவர் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ஓபேபி, படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது ஒருபுறம் இருக்க,  அமெரிக்காவில் ராணாவிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றதாக ஒரு தகவல் உலாவியது.  மேலும் அவருடைய அம்மா அவருக்கு கிட்னி கொடுத்துள்ளதாகவும்,  இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில் ராணா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவரகொண்டாவின், டியர் காம்ரேட் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவது குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார். அப்போது நடிகர் ராணாவிடம் உடல் நலம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் கொடுத்த ராணா, எல்லா நேரமும் தன்னால் மான்ஸ்டர் மாதிரி இருக்க முடியாது என பதில் கொடுத்துள்ளார். அவரை தொடர்ந்து ரசிகர்கள் சிலர், இது போன்ற செய்திகளை படிப்பதை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளனர். எனினும் ராணா பற்றிய இந்த செய்தி முத்திலும் வதந்தி என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.