Asianet News TamilAsianet News Tamil

ஐம்பது வயதிலும் ஆபாசமா? ரம்யாகிருஷ்ணன் செய்த கேவலமான காரியம்....

ramyakrishnan glamour movie
ramyakrishnan glamour movie
Author
First Published Feb 18, 2018, 1:59 PM IST


வெள்ளை மனசு

1983 ம் ஆண்டு 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய் ஜி மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

200க்கும் அதிகமான படங்கள்ramyakrishnan glamour movie

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். 

முன்னணி நடிகர்கள் படத்தில்:

30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ramyakrishnan glamour movie

பாகுபலி

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 'சிவகாமி தேவி' கதாப்பாத்திரத்தில் நடித்தது இவருக்கு மிகபெரிய பெருமையை பெற்று தந்தது. பாகுபலி படத்தின் மூலம் தேசிய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார்.
சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து அசத்தினார்.ramyakrishnan glamour movie

கவர்சிக்கு துணிந்த ரம்யா:

ஏற்கனவே இவர் ஒரு சில படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். இநிலையில் ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் 'அப்பாவும் விஞ்சும்' என்ற மலையாளப் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் தன்னை விட வயது குறைந்த நடிகருடன் ஆபாச காட்சியில் நடித்துள்ளார்.

மேலும் கதைக்கு தேவை என்பதால் அதில் துணிந்து நடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

ramyakrishnan glamour movie

மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கதில் விரைவில் வெளியாக உள்ள பார்ட்டி படத்திலும் கவர்ச்சி உடையில் கலக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios