பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அதிகம் சண்டை போடாமல் அனைவருடனும் பக்குவமாக நடந்து கொண்ட போட்டியாளர் என்றால் அது பாடகி ரம்யா என கூறலாம். 

தற்போது இவரையே கடுப்பாக்கி உள்ளது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு டாஸ்க்.

 

நேற்றைய தினம், பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களுக்கும் திருடன் - போலீஸ் டாஸ்க் கொடுத்தார். இதில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் டானியல் ஆகியோருக்கு திருடன் வேடம் கொடுக்கப்பட்டது. 

போலிசாக மும்தாஜ், மஹத், மற்றும் சென்ராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற அனைவரும் பொதுமக்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

இதில் முக்கியமானது என்னவென்றால், பொதுமக்களாக உள்ள போட்டியாளர்களிடம் இருந்து, திருடர்கள் அவர்களுடைய பொருட்களை திருடி ஒளித்து வைக்க வேண்டும். திருடிய பொருள் திருடர்கள் கையில் இருப்பதை பார்த்தல் அவர்களை போலீஸ் கைது செய்யலாம். மேலும் குறிப்பிட்ட தொகை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்காளி விடுவிக்கலாம் என கூறப்பட்டது. 

இந்த டாஸ்க்கால், திருடர்கள் அனைத்து போட்டியாளர்களின் பொருட்களையும் திருடுகிறார்கள். ஒரு நிலையில் மிகவும் கடுப்பான ரம்யா...'இது மிகவும் சீப்பான விளையாட்டு தன்னால் இந்த விளையாட்டை தொடர முடியாது என்று கூறுகிறார். 
 
யாருக்கும் இந்த விளையாட்டை தொடர மனம் இல்லை என்று தெரிவிக்க, வைஷ்ணவியும் மூன்று வாரங்களாக கோவம்மே படாத ரம்யா தற்போது கோவப்படுவதாக கூறுகிறார்.

இதை தொடர்ந்து, பிக் பாஸ் அனைத்து போட்டியாளர்களிடமும் பேசும் காட்சி காட்டபடுகிறது. இதில் 'ரம்யாவை பிக்பாஸ் தலைவி பொறுப்பில் இருந்து நீக்கியதோடு, ரம்யாவை நேரடியாக அடுத்த வார எவிக்ஷனுக்கு செல்வதாக கூறுகிறது பிக்பாஸ் குரல்.  

விளையாட்டாக ஆரம்பித்து இப்படி விபரீதத்தில் முடியும் அளவிற்கு, என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.