பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம், வீட்டிற்கு போனால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்ட ரம்யாவே மக்கள் மத்தியில் மிகவும் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறினார்.

இவர் வெளியே வர முக்கிய காரணம், மற்ற போட்டியாளர்களோடு இவரை ஒப்பிடும்போது, இவர் அனைவரிடமும் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். கிட்ட தட்ட மமதியை போலவே இவரும் ரசிகர்களால் அதிகம் கோபம் படாத, அமைதியான போட்டியாளராக பார்க்கப்பட்டார். எனவே இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தனர் மக்கள்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், முதல் வேலையாக தனக்கு பக்க பலமாக இருத்த அனைவருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ரம்யா.

இந்த வீடியோவில்... இனி என்னால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்திருக்க முடியாது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஒருவரை பற்றி மற்றவரிடம் பின்னால் சென்று பேசுவது. சண்டை போடுவது என இருந்ததாக தெரிவித்தார். மேலும் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் சிலர் வருதப்படுவதகவும் ஆனால் உண்மையில் நான் வெளியே வந்தது தான் தனக்கு மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.

அந்த வீடியோ இதோ...