பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு இளம் நடிகைகள் விரித்த சூழ்ச்சி வலையில் சிக்கி மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி, ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மஹத். 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத் தற்போது தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் சந்தித்து வருகிறார். மேலும் தன்னுடைய காதலி பற்றி மிகவும் உருக்கமான காதலை வெளிப்படுத்தும் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஏற்கனவே தன்னுடைய நண்பன் சிம்புவை சந்தித்து அடிவாங்கிய மஹத், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான, NSK ரம்யாவை சந்தித்துள்ளார். 

இந்த சந்திப்பின் போது ரம்யா ஒரு கம்பை வைத்து, மகத்தை இப்படி செய்வியா என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு, வெளு வெளு என வெளுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. ரம்யா அடிக்கும் போது மஹத் இதுதான் பிக்பாஸ் வயலன்ஸ் என்று கூறுகிறார்.

இவரை அடிக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ரம்யா 'அடி உதவுவது போன்று அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்' என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.