இடுப்பு புகைப்படம் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியை பார்த்து மேலும் சில இளம் நடிகைகளும் கேமரா மேன்களுடன் மொட்டை மாடியில் சுற்றி வருகின்றனர்.

ஜோக்கர் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகை என பெயர் பெற்றவர் ரம்யா பாண்டியன். நெல்லையை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் சினிமா மீதான ஆசையால் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு ராஜூ முருகன் மூலமான பழக்கம் மூலமாக ஜோக்கர் படத்தில் கதாநாயகனின் மனைவியாக களம் இறங்கினார். 

இதன் பிறகு ஆண் தேவதை எனும் சமுத்திர கனி படத்தில் திறமை காட்டினார் ரம்யா. இந்த நிலையில் தான் அவர் வெளியிட்ட மூன்றே மூன்று புகைப்படங்கள் இணையதளங்களை பற்றி எரிய வைத்தது. யார் இந்த ரம்யா பாண்டியன் என பலரும் தேட ஆரம்பித்த நிலையில் தற்போது முன்னணி செய்தி தொலைக்காட்சகிள் முதல் நேற்று வந்த யூ ட்யூப் சேனல் வரை பலரும் ரம்யா வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். 

இந்த நிலையில் ரம்யா பாண்டியனுக்கு தான் இடுப்பு இருக்கிறதா? எங்களுக்கு இல்லையா? என்று சில இளம் நடிகைகள் கோபம் அடைந்துள்ளனர். இதே போல் ஒரு சில படங்களில் நடித்து வாய்ப்பு இல்லாமல் தவிக்கும் நடிகைகளும் தங்கள் இடுப்பை இஷ்டம் போல் காட்ட தயாராகி வருகின்றனர். இதனால் கோடம்பாக்கத்தில் ஸ்டில் போட்டோகிராபர்களுக்கு செம கிராக்கி என்று சொல்கிறார்கள்.

குறிப்பாக டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்த ஒரு நடிகை, ட்விட்டரில் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு பிரபலமான ஒரு நடிகை கிட்டத்தட்ட ஒரு போட்டோ சூட்டை எடுத்து முடித்துவிட்டதாக சொல்கிறார்கள். அந்த புகைப்படங்கள் வெளியான பிறகு பாருங்கள் என்று சவால் வேறு விடுகிறார்களாம் அவர்கள். ரம்யா வெளியிட்ட புகைப்படங்களே இளைஞர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது. அடுத்தடுத்து இதே பாணியில் புகைப்படங்கள் வெளியானால்?