Thalaivar 169 : நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியாகி தோல்வியை சந்தித்ததால் தலைவர் 169 படம் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், ரஜினியே நெல்சன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.
அண்ணாத்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததன் காரணமாக தனது அடுத்த படத்திற்கான கதையை கவனமாக தேர்ந்தெடுக்க முடிவு செய்த ரஜினி, கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, கே.எஸ்.ரவிக்குமார், பால்கி, வெங்கட் பிரபு என பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இதில் இறுதியாக நெல்சன் சொன்ன கதை மிகவும் பிடித்துப்போனதால் அவருடன் பணியாற்ற ஒப்புக்கொண்டார் ரஜினி.
இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அண்மையில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியாகி தோல்வியை சந்தித்ததால் தலைவர் 169 படம் திட்டமிட்டபடி நடக்குமா என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், ரஜினியே நெல்சன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார்.

தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியின் மகளாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்க மேலும் ஒரு முன்னணி நடிகை இணைந்துள்ளார்.

அதன்படி நடிகை ரம்யா கிருஷ்ணன் தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக நடித்திருப்பதால், தலைவர் 169 படத்திலும் அவருக்கு நெகடிவ் வேடமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது பீஸ்ட் தந்த அடியால் நெல்சன் படையப்பா ஸ்டைலில் படம் எடுக்கப்போகிறாரோ என்ற கேள்வி தான் எழுகிறது.
இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal censor : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு சென்சாரில் காத்திருந்த அதிர்ச்சி
