ramya krishnan repalce the nathiya character
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜா குமார ராஜா தற்போது சூப்பர் டீலக்ஸ் என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க சமந்தா ஹீரோயின்னாக நடிக்க உள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியா... ஆரண்ய காண்டம் படம் பிடித்து போனதால் கதையைக் கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.

பின்புதான் தெரிந்ததாம் அது மிகவும் கொடுமைக்கார வில்லி கதாபாத்திரம் என்று! இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தால் தன்னுடைய இமேஜ் கேட்டுப் போய் விடும் என எண்ணி தற்போது இந்தப் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவருக்கு பதில் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள நதியா, சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடிக்க கமிட் ஆனது உண்மைதான் ஆனால் படத்தில் இருந்து விலகியது குறித்து பேச விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.
