ramya krishnan reject baahubali story
பாகுபலி திரைப்படம் இன்று அனைத்து திரையுலகினரும் பார்த்து வியக்கும் அளவிற்கு பெரும் சாதனை படைத்த படமாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் நடித்த பலருக்கும் தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜ மாதா சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன்.
முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஸ்ரீதேவி,அவர் மறுக்கவே ஒரு சில முக்கிய நடிகைகளிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது.
ஆனால் அனைவரும் இந்த கதையை ஒற்றுக்கொள்ளாததால் பின் கடைசியாக அந்த கதாபாத்திரத்தில் ரம்யா நடித்தார்.
ஆரம்பத்தில் அவரும் இதை வேண்டாம் என ஒதுக்கினாராம். ஏன் தெரியுமா. ஒரு படத்திற்காக 3 வருடத்தை கொடுத்தால் மற்ற படங்கள், சீரியல்களில் நடிக்க முடியாது. பலரும் மறந்து விடுவார்கள் என்கிற பயத்தால்.
பின் ராஜமௌலியே போன் செய்து கதையில் உங்க பகுதியை கேட்டுப்பாருங்கள் என்றாராம்.
கதை கேட்ட பின் பிரம்மிப்பான ரம்யா உடனே ஓகே சொல்லி கூடுதலான நாட்களை கொடுத்தாராம். மேலும் ரம்யா கிருஷ்ணான் நடித்து வரும் சீரியல் இந்த படத்தால் நிச்சயம் தடைபடாது என்று உறுதியளித்தாராம். அதற்கு ஏற்றாப்போல் இறுதி வரை நடந்துகொண்டார் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.
