தமன்னாவை ஓரங்கட்டி... டிரெண்டிங்கில் இடம்பிடித்த ரம்யா கிருஷ்ணனின் காவாலா டான்ஸ் - 52 வயசுல என்னமா ஆடுறாங்க!
இணையத்தில் செம்ம டிரெண்டிங்கில் உள்ள காவாலா பாடலுக்கு ஜெயிலர் பட நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சென்சேஷனல் மியூசிக் டைரக்டர் என்றால் அது அனிருத் தான். இவர் இசையமைத்தாலோ அல்லது வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பாடினாலோ அந்தப் பாடல் சூப்பர் ஹிட் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு செம்ம ஃபார்மில் இருக்கிறார் அனிருத். இவரின் லேட்டஸ்ட் டிரெண்டிங் பாடல் என்றால் அது ஜெயிலர் படத்தின் பாடல்கள் தான்.
ஜெயிலர் படத்தில் இருந்து தனித்தனியாக வெளியிடப்பட்ட காவாலா மற்றும் ஹுகூம் ஆகிய இரண்டு பாடல்களுமே பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதில் ஹுகூம் பாடல் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான ஒரு பாடலாகும். இப்பாடலில் இடம்பெற்ற பவர்புல்லான வரிகளை கேட்டாலே புல்லரிக்கும் அந்த அளவுக்கு பாடி இருக்கிறார் அனிருத். சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவில் கூட இப்பாடலை லைவ் ஆக பாடிய அனிருத், ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்டதால் மீண்டும் பாடி அவர்களை குஷிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... என்னது 10 லட்சமா... தமன்னாவின் ரெட் ஹாட் கிளிக்ஸ் படைத்த சாதனை
அதேபோல் அனிருத்தின் மற்றொரு டிரெண்டிங் பாடல் என்றால் அது காவாலா தான். ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளிவந்த இப்பாடலில் ரஜினிக்கு பெரியளவில் ஸ்கோப் இல்லை என்றாலும், இதில் தமன்னா ஆடிய கவர்ச்சி நடனம் அப்பாடலை வேறலெவலில் ரீச் ஆக்கியது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களில் காவாலா பாடல் நடனம் தான் ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடல் ரீச் ஆகி உள்ளது.
காவாலா பாடலுக்கு தமன்னா டான்ஸ் ஆடிய வீடியோ தான் வைரலாகி வந்த நிலையில், தற்போது அவரை ஓரங்கட்டும் வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் தன்னுடைய மேக் அப் ஆர்டிஸ்ட் உடன் காவாலா பாடலுக்கு கியூட்டாக நடனமாடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் இவங்களுக்கு 52 வயசுனு சொன்னா எவனும் நம்ப மாட்டான், என்னமா ஆடுறாங்க என வியந்து பார்த்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் ‘வாரிசு’ விஜய்யின் அம்மா..!