ramya go to thirupathi with husband

நடிகை ரம்பா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெறுவதற்காக நீதி மன்றத்தை நாடினார்.

மேலும் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி, மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து குடும்ப நல நீதி மன்றம் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது. இருவரும் தங்களுடைய குழந்தைகளின் நலனை கருதி சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது, தன்னுடைய கணவருடன் சேர்ந்துவாழ தொடங்கியுள்ள நடிகை ரம்பா, அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

இதுகுறித்து கூறியுள்ள ரம்பா தான் கணவருடன் சேர்த்தால் கோவிலுக்கு வருவதாக வேண்டிக்கொண்டதாகவும், தற்போது நேர்த்திக்கடனை செலுத்த மகிழ்ச்சியோடு வந்திருப்பதாக கூறினார்.