Ramya catch jimiki kammal fever
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடித்து ஓணம் தினத்தில் வெளிவந்த திரைப்படம் 'வெளிப்படிந்தே புஸ்தகம்' இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த படத்தில் வரும் ஜிமிக்கி கம்மல் என்னும் பாடலுக்கு நடனமாடி அதனை சமூகவலைத்தளத்தில் அப்லோடு செய்து, மிகவும் சிறப்பாக ஆடிய குழுவிற்கு பரிசு என படக்குழு அறிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய குழுக்களுடன் நடனமாடி அதனை வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில் ஷெரில் என்பவரது நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகவும் வைரலாகியது.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் தொகுபாலினியாக பணியாற்றிவரும் ரம்யா. ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு பரதம் மற்றும் குத்தாட்டம் ஆடி அதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிறக்கம் செய்துள்ளார்
