சமீப காலமாகவே பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்க பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் நடிகை சில்க் சுமித்தா வாழ்க்கைவரலாறு, கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் டோனியின் வாழ்க்கைவரலாறு, மற்றும் இப்போது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு இப்போது படமாகி வருவது குறிப்பிடதக்கது.

இதே போல் தற்போது இந்தியாவின் பிரபலமான, சீனியர் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரைப்படமாகிறது. 

நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் ராம்ஜெத்மலானி இந்தியாவின் மிக திறமையான வழக்கறிஞர்களில் ஒருவர். நீதிபதி வாய்ப்பு இவரை தேடி வந்தபோதிலும், அதனை தவிர்த்துவிட்டு வழக்கறிஞராகவே இருந்து வருகிறார். 

மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக எம்பி கனிமொழி உள்பட பல விஐபிக்களுக்காக இவர் வாதாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய வாழ்க்கை வரலாறு தற்போது பாலிவுட்டில் திரைப்படமாகவுள்ளது. இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்களான ரோணி, குணால் ,நடிகை சோகா அலிகான் ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

ராம்ஜெத்மலானியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான, சிக்கலான சம்பவங்களை வைத்து இந்த படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான முறையை அனுமதியை அவரிடம் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும் தயாரிப்பாளர்களில் ஒருவரான சோகன் அலிகான் கூறியுள்ளார். 

ராம்ஜெத்மலானி வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.