ramgopal varma tweet issue

பிரபல சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, எப்போதும் யாரை பற்றியாவது குறை கூறிக்கொண்டே இருப்பார். அவர் யாரையாவது புகழ்ந்தால் தான் ஆச்சர்யமே.

இந்நிலையில் தற்போது வெளியாகி 1000 கோடி வசூல் சாதனை செய்துள்ள பாகுபலி படத்தின் கதாநாயகர் பற்றி கூறியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, நடிகை ரம்யா கிருஷ்ணன், சிவகாமி கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார் என அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது, ஸ்ரீ தேவிதான் , என்ன காரணத்தாலோ அது முடியாமல் போனது, ஒரு வேலை ஸ்ரீ தேவி நடித்திருந்தால் தன்னுடைய நடிப்பால் பிரபாஸை ஓரம் கட்டியிருப்பார் என கூறியுள்ளார்.

இந்த டீவீட்டை கண்ட, பிரபாஸ் ரசிகர்கள் பலர் செம கோபத்தில் ராம் கோபால் வர்மாவை திட்டி வருகின்றனர்.