பலராலும் சர்ச்சை இயக்குனராக அறிய பட்டவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஏப்போதுமே எதிர் மறையான கருத்துக்களை கூறி பலரது கோபத்திற்கு ஆளானவர்.

தற்போது தமிழகம் முழுவதும், ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போராடி வருகின்றனர். இது குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா....

ஆனால் தெலுங்குகாரர்களால் ஆந்திராவில் நடத்தப்படும் 'கொடிபன்டம்' என்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றி எதுவும் கூறாத இவர், ஜல்லிக்கட்டுக்காக போராடி வருபவர்கள் மீது 1000 காளைகளை ஏவி விட வேண்டும் என திமிருடன் கூறியுள்ளார்.

அதே போல இவர் இயக்கும் திரைப்படங்கள் கூட பெரும்பாலும் வன்முறைகளையும், ஆபாசத்தையும் கட்டவிழ்த்து விடும் படங்களாகவே அமைந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மறைந்து தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியபோது, தான் சசிகலாவை பற்றி படம் எடுக்க போவதாக கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய இயக்க நாயகன் இவர்.

தற்போது இவரின் இந்த திமிர் பேச்சுக்கு வெங்கட் பிரபு, நடிகர் ஜெய் மற்றும் பலர் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் பல தமிழர்கள் மிக மோசமாக கூறி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.