பலரால் சர்ச்சைக்குரிய பிரபலமாக அறியப்பட்டவர் இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆன ராம் கோபால் வர்மா.
இவர் அடிக்கடி பிரபலங்களை பற்றி ஏதாவது சர்ச்சைகுரிய விஷயங்களை வலை தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிருப்திக்கு ஆளாவர்.
இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ள இவர் உளவியல் பரபரப்பூட்டும் படைப்பு, திகில்த் திரைப்படம், கற்பனை திரைப்படங்கள், அரசியல்வாதி, இசையகம், குற்றவியல் தொடர்புடைய மேலும் பல வகைத் திரைப்படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஒலித்து கொண்டிருக்கும் ஒரு பெயர் என்றால் அது சசிகலா என்பதை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவை மையமாக வைத்தே தமிழக அரசியல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிஜ நிகழ்வுகளை பரபரப்பாக திரைப்படமாக உருவாக்கும் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா, 'சசிகலா' என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் பிரபலமான அரசியல்வாதி ஒருவரின் நெருங்கிய தோழியின் வாழ்க்கை வரலாற்று கதைதான் இந்த 'சசிகலா' படம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படம் சசிகலா குறித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இந்த படத்தின் கதை பற்றி இன்னும் ராம் கோபால் வர்மா எதுவும் வெளியிட வில்லை.
