இயக்குநராக அறிமுகமாகி வெற்றிகரமாக 30 ஆண்டுகளைக் கடந்திருக்கும் ராம்கோபால் வர்மா முதல்முறையாக நடிகர் அவதாரம் எடுக்கிறார். ‘கோப்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் வேடத்தில் நடிக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

1989ம் ஆண்டு ‘சிவா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம்கோபால் வர்மா. இதே படத்தை இந்தியிலும் இயக்கி ஒரே படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானவர் வர்மா. சர்ச்சையான படங்கள் இயக்குவதிலும், அண்டர் வேர்ல்டு தாதாக்களின் கதைகளை படமாக்குவதிலும் பெரும்பேர் பெற்றவர். இந்தி, தெலுங்கு மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள ராம்கோபால் வர்மா இதுவரை நடிகராக ஒரு படத்தில் கூட தலைகாட்டியதில்லை.

இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தானே இயக்கும் ‘கோப்ரா’ படத்தில் முதல்முறையாக சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள வர்மா...’எனது பிறந்த நாளை முன்னிட்டு நான் முதல்முறையாக நடிகர் அவதாரம் எடுத்துள்ள செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். இதற்காக நீங்கள் என்னை வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை.நன்றி ’என்று பதிவிட்டிருக்கிறார்.

வாழ்த்துக்கள் ராம்கோபால் வர்மா. கடந்த 30 ஆண்டுகளா நடிக்காம இருந்ததுக்கு...