மகன் ஷிவினின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ரம்பா. 

முன்னதாக தெலுங்கு சினிமாவில் கலக்கி வந்த ரம்பா உழவன் படம் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். உள்ளத்தை அள்ளித்தா மிகப்பெரிய வாய்ப்பை அள்ளிக் கொடுத்தது. அதில் அழகிய லைலாவாக வந்து ரசிகர்களை வசீகரித்தார் ரம்பா. பின்னர் தமிழில் மிகவும் அறிந்த நாயகிகளில் ஒருவராகிவிட்டார். ரசிகர்களால் தொடை அழகி என கொண்டாடப்பட்ட அவர் 90களில் முன்னணி நடிகைகளில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்தார்.

நவரச நாயகன் கார்த்திக், பிரபு, ரஜினி, விஜய் என அன்றைய முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இவர், பல விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளார். இறுதியாக தமிழில் பெண் சிங்கம் என்னும் படத்தில் காவிய காமியோ ரோலில் தோன்றியிருந்தார் ரம்பா. தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காளி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் ஒரு கை பார்த்தவர்.

மேலும் செய்திகளுக்கு...இந்த முறை வேற லெவல்...செம காஸ்ட்லியாக பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்கு வந்த திரிஷா

View post on Instagram

சமந்தா முதல் அனுஷ்கா வரை...தென்னிந்திய நாயகிகளின் பிரியமான உணவு

இதற்கிடையே படங்களில் பிஸியாக இருந்த ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் தொழிலதிபராவார். இவர்களது திருமணம் திருப்பதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை அடுத்து தனது குடும்பத்துடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

View post on Instagram

தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது குடும்பத்துடனான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து வந்தார். மீனாவின் கணவர் இறந்த சமயத்தில் அவரை நேரில் சந்திக்க சென்னை திரும்பிய ரம்பா அவ்வப்போது மீனாவுடனான புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார்.

View post on Instagram

இந்நிலையில் மகன் ஷிவினின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பிரபல மால் ஒன்றில் அவர்கள் கொண்டாடிய படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

View post on Instagram