கொஞ்சம் விட்டிருந்தால் திரிஷா, திவ்யா, நயன்தாராக்களை ஜோடியாகக் கேட்டிருப்பாரோ என்னவோ, கரகாட்டக்காரன் 2வில் அப்பா வேஷத்திலெல்லாம் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம் நடிகர் ராமராஜன்.

இரு வாரங்களுக்கு முன்பு இயக்குநர் கங்கை அமரன் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் அடுத்த பாகத்தை இயக்கவிருப்பதாகவும் அதில் ராமராஜன் கனகா, கவுண்டமணி,செந்தில் போன்றவர்களை முதல் தலைமுறையாகக் காட்டிவிட்டு அவர்களது மூன்றாவது தலைமுறையைக் கொண்டு நிகழ்காலக் கதையை நகர்த்தவிருப்பதாகவும் பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் கங்கை அமரனின் முயற்சிக்கு முதல் முடுக்கட்டையை முன்னாள் கதாநாயகன் ராமராஜனே போட்டுவிட்டாராம். ‘எம்.ஜி.ஆர் எத்தனை வயசு வரைக்கும் ஹீரோவா நடிச்சார்ங்குறது மறந்துபோச்சா? அப்பாவா, தாத்தாவா நடிக்கணும்னு தயவு செஞ்சு என்கிட்ட வராதீங்க’என்று கறாராக சொல்லிவிட்டாராம். அப்புறம் என்ன படத்தைக் கிடப்பில் போடும் முடிவில் இருக்கிறாராம் கங்கை அமரன்.