இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்க உள்ள நிலையில், இப்படத்திற்கு வைக்கப்பட உள்ள டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்க உள்ள நிலையில், இப்படத்திற்கு வைக்கப்பட உள்ள டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார். இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில் ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, இன்று முதல் ஷங்கர் ராம் - சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட உள்ளது. இதில் இப்படத்தில் நடிக்கும், அனைத்து பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இன்று துவங்கும் படப்பிடிப்பு, சில நாட்கள் நடத்தி முடித்த பின்னர், ஷங்கர் மீண்டும் இந்தியன் 2 படத்தை எடுத்து முடிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாகவும், அதனை எடுத்து முடித்த பின்பே ,ராம் சரண் நடிக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு, ’விஸ்வாம்பாரா' என்கிற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்த்ள்ளதாகவும் ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.